
கொல்கத்தாவின் டோலிகஞ்ச் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு தெருவோர வியாபாரி, ஸ்டார்பக்ஸ் பாணியில் தனித்துவமாக காபி பரிமாறுகிறார்.
வாடிக்கையாளரின் பெயரை கோப்பையில் எழுதுவதற்கு பதிலாக, அவர்களின் முகத்தை கேலிச்சித்திரமாக உடனடியாக வரைந்துகொடுக்கிறார்.
சியாமா பிரசாத் தே என்பவர், ஒரு அனுபவமிக்க கேலிச்சித்திரக் கலைஞரும் ஓவியரும் ஆவார். இவர் தனது வாடிக்கையாளருக்கு வழங்கும் ஒவ்வொரு காபி கோப்பையிலும் கலைநயத்துடன் கூடிய அவரது படைப்புகளை வழங்கி வருகிறார்.
இந்த கடையின் வீடியோவை ஒரு டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து இது வைரலாகி வருகிறது.
பாரம்பரிய சூடான காபியைத் தவிர, குளிர்ந்த காபி, மோகா, வெண்ணிலா சுவை மற்றும் சாக்லேட் கலந்த காபி ஆகியவை இந்த கடையில் கிடைக்கின்றன.
கேலிச்சித்திர காபி கடை
கடை உரிமையாளரின் கூற்றுப்படி, அவர் இந்த தனித்துவமான காபி வணிகத்தை கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு தொடங்கியிருக்கிறார். அதற்கு முன்பு, அவர் ஒரு பத்திரிகை கடையில் பணிபுரிந்திருக்கிறார்.
கோவிட்-19 காலகட்டத்தில் இந்த கடையை தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே அப்பகுதியில் தேநீர் கடைகள் இருப்பதால், அவர் காபி கடையைத் தொடங்க முடிவு செய்து, வியாபார யூக்திக்காக இப்படி தனித்துவ முறையில் காபிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார் சியாமா பிரசாத்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!