
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசுகையில், முதல்முறையாக இந்தியா மற்றும் சீனாவின் உறவு வலுபெறுவதை ‘யானை மற்றும் டிராகனின் நடனம்’ என அழைத்தது ஜி ஜின்பிங் எனக் கூறியுள்ளார்.
பின்னர் மீடியா இந்தியா – சீனா – ரஷ்யா முத்தரப்பு உறவுகளைக் குறிக்க கரடியைச் சேர்த்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். கரடி ரஷ்யாவின் பாரம்பரிய அடையாளமாக பார்க்கப்பட்டாலும் அதற்கு பதிலாக புலியை அடையாளமாகப் பயன்படுத்தியிருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
ஏனென்றால் உலகின் மிகப் பெரிய புலி இனமான சைபீரியன், அமூர் புலிகள் கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவை. மேலும் அவர் பேசிய மாநாடு கிழக்கு நாடுகள் தொடர்பானது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதற்கு இடையில் அமெரிக்காவின் சின்னமான இரட்டத்தலை கழுகை விமர்சித்தவர், “அது கிழக்கும் மேற்கும் பார்க்கிறது. ஆனால் தெற்கு என்ற ஒன்று இருக்கிறது.” என்றார்.
அதாவது இன்றைய புவி-அரசியல் சூழலில் எதிர்பாராத திசைகளில் திருப்பங்களைக் கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடும் விதமாக அப்படிப் பேசினார்.
முன்னதாக பெய்ஜிங்கில் நடைபெற்ற SCO மாநாட்டில் பேசிய புதின், “வரிகள் அதிகரிப்பு, வர்த்தக தடைகளை ஏற்படுத்துவது போன்ற செயல்களால் ஆசியாவில் வலிமை வாய்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவை மிரட்டி பணியவைக்க முடியாது.
President of Russia Vladimir Putin, Prime Minister of India Narendra Modi, and President of China Xi Jinping just before the start of the #SCO Summit
© https://t.co/1iwVtSG6SN pic.twitter.com/o1rqQWYhT7
— MFA Russia (@mfa_russia) September 1, 2025
காலனித்துவ சகாப்தம் இப்போது முடிந்துவிட்டது. எனவே இந்த வழிமுறையை பின்பற்றி அமெரிக்கா தங்களது கூட்டாண்மை நாடுகளுடன் பேச முடியாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் பொருளாதார அழுத்தங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆசியாவின் இரு பெரும் பொருளாதாரங்களை (சீனா, இந்தியா) பணியவைக்கும் வேலையில் ஈடுபடுகிறது.
அதிக வரிகளை விதிப்பதன் மூலம் இந்த நாடுகளின் தலைமையை பலவீனமாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சொந்த உள்நாட்டு அரசியல் வழிமுறைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.
நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது அந்த பெரிய நாடுகளின் தலைமை எவ்வாறு எதிர்வினையாற்ற முடியும். இதனை அமெரிக்கா சிந்தித்துப் பார்க்க வேண்டும். விரைவில் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை சகஜ நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனக் கூறியிருந்தார்.