
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் 90 ஆயிரம் பேருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில், தனியார் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.