
ஜப்பானில் சமூகத்தில் பெரிதாக பேசப்படும் ஒரு தனிப்பட்ட விஷயம் தான் “Smell Harassment” அல்லது “ஸுமேஹாரா”. இது ஒருவரின் உடல் வாசனை, அதிகமாகப் பயன்படுத்தப்படும் பர்ப்யூம், புகையிலை புகை, விலங்குகள் அல்லது மலர் வாசனை போன்றவை மற்றவர்களை சங்கடப்படுத்தும் நிலையை குறிக்கிறது.
பொதுப் போக்குவரத்து, அலுவலகம் போன்ற இடங்களில் இந்த வாசனை காரணமாக சிலர் தலைவலி, மயக்கம் அல்லது மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளை சந்திக்கலாம் என்பதால், ஜப்பானில் இது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
2010க்கு பிறகு பரவத் தொடங்கிய இந்த நடைமுறை, இன்று ஜப்பானியர்களின் அன்றாட வாழ்க்கையிலும் பணியிடங்களிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
அங்கு பொதுப்போக்குவரத்து, அலுவலகம் போன்ற இடங்களில் வலுவான வாசனை மரியாதையின்மையாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பர்ப்யூம் தனித்துவம் மற்றும் அழகை வெளிப்படுத்தும் வழக்கமாகக் கருதப்படும் நிலையில், ஜப்பானில் அது பிறரின் நிம்மதியை காக்கும் அளவுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே வித்தியாசம்.
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த Anusha என்ற இந்தியப் பெண் ஜப்பானில் வாழும் போது ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தன் வீட்டில் சாதாரணமாகப் பயன்படுத்திய பர்ப்யூம், அங்கு ஒருவருக்கு அதிகமாக உணரப்பட்டதால், அதை “Smell Harassment” எனக் கருதி எச்சரிக்கப்பட்டது.
இந்தியாவில் பர்ப்யூம் என்பது பெரும்பாலும் தனித்தன்மையை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது. ஆனால் ஜப்பானில், அது மற்றவர்களிடம் மரியாதையை காட்டும் விதமாக மிக மென்மையாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே கலாசார வித்தியாசம்.
இந்த அனுபவத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது, பலரும் வியப்புடன் பதிலளித்தனர். “நான் வாசனைக்கு மிகவும் சென்சிடிவ். பல்வேறு இடங்களில் அதிக வாசனை காரணமாக எனக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது” என்று ஒருவர் கூறினார். மற்றொருவர், “இது எல்லாம் சமூக உணர்வு தான். வலுவான வாசனை சிலருக்கு சிரமத்தைத் தரும் என்பதால், மற்றவர்களைக் கவனித்துக்கொள்வது மரியாதையின் ஒரு பகுதி” என்று கருத்துரைத்தார்.
ஜப்பானில் “Smell Harassment” என்பது உடல்நலக் காரணமாக மட்டும் அல்ல, சமூக ஒற்றுமையையும், பரஸ்பர மரியாதையையும் காக்கும் கலாசார நெறி ஆகும். சில நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களுக்கு வாசனை பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. கூட்டரங்குகள், பஸ்கள், ரயில்கள் போன்ற இடங்களில் பிறருக்கு சிரமம் வராமல் பார்த்துக்கொள்வது அங்கு வாழும் மக்களுக்குப் பெரும் பொறுப்பாகக் கருதப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!