
’எஃப் 1’ தமிழ் ரீமேக்கில் நடிக்க தகுதியானவர் அஜித் என்று நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவில் இருந்து எஃப்1 ரேஸில் பங்கேற்ற நரேன் கார்த்திகேயன் கலந்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.