
திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு நேற்று தேனி மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பதில் அளிக்கவில்லை‌.