
புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த நபர் நொய்டாவில் கைது செய்யப்பட்டார்.
மும்பை போக்குவரத்துப் போலீசாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் செய்தி வந்திருந்தது. ஃபிரோஸ் என்பவரின் பெயரில் வந்த அந்த மிரட்டல் செய்தியில், "மும்பை நகரத்தின் பல்வேறு இடங்களில் 34 மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளன. லஷ்கர் இ ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்த வெடிவிபத்துக்கு 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.