• September 6, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​களாக நியமிப்​ப​தற்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட 9 வழக்​கறிஞர்​கள் கொண்ட பட்​டியலை மத்​திய அரசுதிரும்ப அனுப்​பி​யுள்​ளது. நீதிப​தி​கள் நியமனத்​தில் இடஒதுக்​கீட்​டைப் பின்​பற்​றி, உரிய பிர​தி​நி​தித்​து​வம் வழங்​கி, புதிய முன்​மொழிவை அனுப்​பு​மாறு மத்​திய சட்​டத் துறை கேட்​டுக் கொண்​டுள்​ளது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மொத்​தம் 75 நீதிபதி பணி​யிடங்​கள் உள்​ளன. தற்​போது தலைமை நீதிபதி உட்பட மொத்​தம் 56 நீதிப​தி​கள் பணி​யில் உள்​ளனர். 19 நீதிப​தி​கள் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.

இந்​நிலை​யில், காலி​யாக உள்ள பணி​யிடங்​களை நிரப்புவதற்​காக வழக்​கறிஞர்​கள் கே.கோ​விந்​த​ராஜன், இ.வி.சந்​துரு(எ) இ.சந்​திரசேகரன், பி.​வி.​பாலசுப்​பிரமணி​யம், என்​.சி. அசோக்​கு​மார், ஆர்​.​காந்​தி, அசன்முகமதுஜின்​னா, எம்​.பி. செந்தில், ஜெ.சந்​திரன் சுந்​தர் சசிகுமார், இ.மனோகரன் ஆகியோரை சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக நியமிக்க, சென்னை உயர் நீதி​மன்​றம் மத்​திய அரசுக்கு கடந்த ஏப்​ரல் மாதம் முன்​மொழிவு அனுப்​பியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *