• September 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​விபத்​துகள் அதி​கம் நடக்​கும் 50 இடங்​களில் வியா​பாரி​கள், காவலா​ளி​கள், போலீ​ஸார், இளைஞர்​களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி 108 ஆம்​புலன்ஸ் நிர்​வாகம் சார்​பில் அளிக்​கப்​பட​வுள்​ளது. விபத்​துகளில் சிக்​குபவர்​களுக்கு உடனடி சிகிச்சை அளிக்​கும் வகை​யில், தமிழகத்​தில் 108 ஆம்​புலன்ஸ் சேவையை செயல்​படுத்தி வரும் இஎம்​ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்​வீசஸ் நிறு​வனம் நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

இது தொடர்​பாக 108 ஆம்​புலன்ஸ் நிர்​வாக மாநில செயல் தலை​வர் செல்​வகு​மார் கூறியதாவது: தமிழகத்​தில் ஒரே பகு​தி​யில் ஆண்​டுக்கு 100-க்​கும் மேற்​பட்ட விபத்​துகள் நடந்​துள்​ளன. அத்​தகைய இடங்​களில் 50 இடங்​கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன. அங்கு வியா​பாரி​கள், காவலா​ளி​கள், போலீ​ஸார் மற்​றும் அப்​பகுதி இளைஞர்​கள் 50 பேருக்கு முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி வழங்​கப்​பட​வுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *