• September 6, 2025
  • NewsEditor
  • 0

மாமல்லபுரம்: ​பாமக நிறு​வனர் ராம​தாஸ் எழுப்​பிய 16 கேள்வி​களுக்கு எந்த பதிலை​யும் தெரிவிக்​கப்​போவ​தில்லை என அக்​கட்சியின் தலை​வர் அன்​புமணி கூறியுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மாமல்​லபுரம் அருகே சூளேரிக்​காடு பகு​தி​யில் உள்ள தனி​யார் பண்ணை வீட்​டில் பாமக தலை​வர் அன்​புமணி தலை​மை​யில் மாவட்ட செய​லா​ளர்​கள் மற்​றும் மாவட்ட தலை​வர்​கள் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற்​றது.

இதில், கட்சி விதி​களை மீறி செயல்​பட்​ட​தாக 16 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்​டும் என ராம​தாஸ் தரப்​பிலிருந்​து, அன்புமணியிடம் விளக்​கம் கேட்டு கடிதம் அனுப்​பப்​பட்​டது. இதற்கான காலக்கெடு, கடந்த ஆக. 31-ம் தேதி​யோடு நிறைவடைந்த நிலை​யில், 10-ம் தேதி வரை பதில் அளிக்க அவகாசம் வழங்​கு​வ​தாக ராம​தாஸ் தெரி​வித்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *