
மனைவிகளின் பேச்சைக் கேட்கும் கணவர்கள் அந்தத் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், தங்களின் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாகவும் சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
திருமணம் என்றால் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அந்த மண வாழ்வு சரியாக அமையவில்லை என்றால் விவாகரத்து செய்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தி காட்மேன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்தவர்கள் (the Gottman Institute) ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அதன்படி தங்கள் மனைவிகளுக்குக் கீழ்ப்படியும் கணவர்கள் வெற்றிகரமான திருமணங்களை உருவாக்கி தங்கள் துறைகளிலும் வெற்றிகரமான நபராக மாறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிழ்ச்சியான, விவாகரத்து இல்லாத திருமணங்களின் பண்புகளைப் பல வருடங்களாக ஆய்வு செய்த பிறகு டாக்டர் ஜான் காட்மேன் என்பவர் புதுமண தம்பதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரின் கூற்றுப்படி, ”மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்! தனது சமீபத்திய ஆராய்ச்சியில் ஆண்கள் தங்கள் மனைவிகளைக் கேட்டுச் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி காண்கிறார்கள்.
மனைவிகள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஆண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாரம்பர்ய விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் கணவன்மார்கள் அதனை எதிர்க்கக் கூடாது” என்று அவர் தெரிவிக்கின்றார்.
மனைவிகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் இதுபோன்று எதிர்ப்பதால் திருமணம் வாழ்வு முறிவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
உறவுகள் மற்றும் வெற்றிகரமான திருமணத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கு குறித்த காட்மேன் ஆய்வு முடிவுகள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!