
டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் முதல் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளது.
இந்த பங்களாவின் தற்போதைய உரிமையாளர்களான ராஜ்குமாரி கக்கர் மற்றும் பினா ராணி, ராஜஸ்தானின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் ₹1,400 கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தொழிலதிபர் ஒருவருக்கு ₹1,100 கோடிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லூட்டியன்ஸ் என்பவரால் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இங்கு 3,000 பங்களாக்கள் உள்ளன, அதில் 600 மட்டுமே தனியார் உரிமையில் உள்ளன, மற்றவை அரசு இல்லங்கள் மற்றும் தூதரகங்களாக உள்ளன.
இந்த விற்பனை இறுதியாகி விட்டால் இது இந்தியாவின் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய வரலாறு படைக்கும் என்று கூறப்படுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!