
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இதில், சகலகலா வல்லவன் படத்தில் வரும் ‘இளமை இதோ இதோ…’ பாடல் இடம்பெற்றிருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் மீண்டும் பரவலாகப் பேசப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தப் பாடலை தனது அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக, ரூ.5 கோடி இழப்பீடு கோரி இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு, படக்குழு தரப்பில், “சட்டபூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தியுள்ளோம்” என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே பல திரைப்படங்களில் தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதற்காக வழக்குகள் தொடர்ந்துள்ள இளையராஜா, இப்போது அஜித்தின் படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!