• September 5, 2025
  • NewsEditor
  • 0

ஆக்ஸ்போர்டு டிக்ஷனரில கூட வருஷத்துக்கு நாலு முறை தான் வேர்ட்ஸ் சேக்குறாங்க… ஆனா நம்ம ஜென்சி கிட்ஸ் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறாங்க..

இன்ஸ்டா, ஃபேஸ்புக், செலிபிரிட்டி இன்டர்வியூஸ்னு எங்க பார்த்தாலும் கோஷ்டிங் (ghosting ), பூக்கி (pookie), சுட்சுவேஷன்ஷிப் (situationship), சால்டி (salty ) போன்ற பல ஜென்சி வார்த்தைகள், சோசியல் மீடியாவிலும் அன்றாட வாழ்க்கையிலும் வளம் வருகின்றன.

GenZ Words

ஒவ்வொரு ஜென்சி வார்த்தைகளையும் கேட்கும் போது… “என்ன இவன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் யூஸ் பண்றான்… தப்பு தவறா ஏதும் பேசலையே.. இதுக்கு மீனிங் கேட்டா நம்மள ஒருவேளை பூமர்னு சொல்லிடுவானோ…” எனத் தோணும். ஆனா மீனிங் தெரிஞ்சப்புறம் சிரிக்கிறதா அழுகுறதான்னு ஒரே கன்ஃபியூஷன்…. அப்படி என்னதான் பேசுறாங்க இந்த ஜென்சி கிட்ஸ்..! 

இன்ஸ்டா இம்சைகள்

நினைச்ச நேரம் பிடிச்ச டிரஸ்ஸ மாத்தி மாத்தி போடுற மாதிரி, நினைச்ச நேரம் ஒவ்வொரு இன்ஸ்டா அக்கவுண்ட வச்சுக்கிட்டு பல ஸ்பை ஒர்க்க தீவிரமா பார்க்குற உங்க கில்லாடி ஃப்ரெண்ட் வச்சிருக்க ஒரு அக்கவுண்ட்தான் ரியல் ஐடியா இருக்கும். மத்ததெல்லாம் ஃபின்ஸ்டா (finsta )தான். அப்படின்னா ஃபேக் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்னு அர்த்தமாம்.

finsta
finsta

அதே மாதிரி அதிகமா ஃபோன் யூஸ் பண்ணா பிரைன் ராட் (brain rot ) ஆகிடும்னு சொல்றாங்க. அது என்ன ‘ராட் ‘..? பொதுவா அழுகி போனாலோ, மக்கி போனாலோ அததானே ராட்னு சொல்லுவோம். ஆமா.. பிரைன் ராட்டும் கிட்டத்தட்ட அப்படித்தான். ரீல்ஸ், ஷார்ட்சுனு அதிகமா ஆன்லைன் கன்டன்ட் கன்ஸ்யூம் பண்றதுனால நம்ம மூளை சோம்பேறியா மாறிடுமாம். இதைத்தான் பிரைன் ராட்னு சொல்றாங்க. கேக்குறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருந்தாலும் இது ரொம்ப ஆபத்தான டேர்ம் பிரண்ட்ஸ்.

வெளிய ஸ்வீட் … உள்ள சால்ட்

செய்றது எல்லாம் செஞ்சுட்டு.. எதுவுமே செய்யாத மாதிரி அவங்களோட பழிய உங்க மேல தூக்கி போட்டாங்கன்னா அதுக்கு பேரு தான் கேஸ் லைட்டிங் (gas lighting).

நீங்க பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் பாராட்டுற மாதிரி பாராட்டிட்டு; மனசுக்குள்ள வன்மத்தையும் பொறாமையையும் வச்சுட்டு இருந்தாங்கன்னா அவங்க ரொம்ப சால்டியா (salty) இருக்காங்கன்னு அர்த்தமாம். அதாவது வெளியே ஸ்வீட்… உள்ள சால்ட்…

அதே மாதிரி நீங்க கும்பலா பேசி சிரிச்சுட்டு இருக்கும்போது யாராச்சும் வந்து உங்க கிட்ட “வாட் இஸ் த டீ..(what is the tea?)?” னு கேட்டாங்கன்னா, நீங்க குடிக்கிறது பிளாக் டீயா… இல்ல மில்க் டீயானு அர்த்தம் கிடையாதாம்.. இன்னைக்கு என்ன காசிப் பேசுறீங்க..? வாட் இஸ் தி கிசுகிசுப்பு ..? அப்படின்னு கேட்கிறதா அர்த்தமாம்.

what is the tea?
what is the tea?

ரிலேஷன்ஷிப் கொடுமைகள்

ஸ்கூல் லைஃப்ல நமக்கு தெரிஞ்சது ஃபிரண்ட்ஷிப்; காலேஜ் லைஃப்ல நமக்கு தெரிஞ்சது இன்டெர்ன்சிப்… அது என்னடா சுட்சுவேஷன்ஷிப்…?

சுட்சுவேஷன்ஷிப் (situationship)னா டான் படத்துல நம்ம சிவாங்கி சொல்ற மாதிரி பிரண்ட்ஷிப்புக்கு மேல.. லவ்வருக்குக் கீழன்னு.. இருக்கு ஆனா இல்லன்னு இரண்டுக்கும் நடுவுல மெதக்குற ஷிப்பதா சுட்சுவேஷன்ஷிப்னு சொல்றாங்க.

நல்ல பழகுற மாதிரி பழகுவாங்க.. திடீர்னு இன்ஸ்டா, வாட்சாப்னு எல்லாத்தையும் பிளாக் பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம தமிழ் சினிமால வர பேய் மாதிரி அப்பப்ப வந்துட்டு காணாம போனாங்கன்னா அவங்க கோஸ்டிங் (ghosting) பண்றாங்கன்னு அர்த்தம்.

நிமிந்தா குனிஞ்சா… எல்லாத்துக்கும் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் அப்படிங்கற வார்த்தைய யூஸ் பண்ற ஜென்சி கிட்ஸ், இப்போ புதுசா மென்டி- பீ (Menty – b) னு சொல்லிட்டு இருக்காங்களாம். அதாவது வொர்க், கரியர், குறிப்பா ரிலேஷன்ஷிப் மூலமா ஏதாவது மென்டல் பிரேக் டவுன் ஃபேஸ் பண்றாங்கன்னா, அதை தான் ஷார்ட்டா மென்டி – பீனு சொல்றாங்களாம்.

அதனால யாராவது உங்க கிட்ட வந்து மென்டி – பீயில் இருக்கேன்னு சொன்னாங்கனா மென்டி – பீக்கு அர்த்தம் என்னன்னு கேட்டு கேட்டு இன்னும் அவங்கள மென்டி – பீயில் தள்ளி விட வேண்டாம். 

ரிலேஷன்ஷிப் கொடுமைகள்
ரிலேஷன்ஷிப் கொடுமைகள்

பென்சிங்.. பிரட் கிரம்பிங்… என்னங்க ஒண்ணும் விளங்கலங்க

பென்சிங் (Benching) அப்படிங்கிற வார்த்தையும் அதிகமா பயன்படுத்தப்படுது. பென்சிங்னா நீங்க நினைக்கிற மாதிரி அட்டனென்ஸ்காக காலேஜ்க்கு வந்து லாஸ்ட் பென்ஞ்சைத் தேய்க்கிறது இல்ல.. அதாவது உங்கள ஒரு பொண்ணுக்கோ அல்லது ஒரு பையனுக்கோ புடிச்சு, ஆனா உங்க கூட கமிட் ஆகாம.. உங்கள வெயிட்டிங் லிஸ்ட்-ல வச்சிருந்தாங்கன்னா உங்கள பென்ஷிங்ல வச்சிருக்காங்கன்னு அர்த்தமாம். சோ… உஷார் பிரெண்ட்ஸ்..!

சரி, பிரட் கிரம்பிங்னா (bread crumbing)… அம்மா கிச்சன்ல பிரட் ரோஸ்ட் பண்ணிட்டு கிரம்ப்ஸ் எல்லாம் கிச்சன்ல கொட்டி கிடக்குமே. அதுவா இருக்குமோன்னு தோணுதா..? அதுதான் இல்ல… உங்கக் கூட கமிட்டாகவும் விருப்பம் இல்லாம.. ஆனா, உங்கள அப்படியே விட்டுட்டும் போகாம அப்பப்போ வந்து எமோஜி அனுப்புறது, ஹாய் சொல்றதுன்னு உங்கள இழுவைல வச்சிட்டு இருந்தாங்கன்னா அதுதான் பிரெட் கிரம்பிங்…

ஜென்சியின் காதல் வார்த்தைகள்

ஒருத்தவங்கள ரொம்ப புடிச்சு, அவங்க கிட்ட அதைச் சொல்லாம, புத்தகம் மூடிய மயிலிறகாக யார்கிட்டயும் சொல்லாம, பாக்கெட்டில காச ஒளிச்சு வச்சிருக்க மாதிரி, காதல ஒழிச்சு வச்சாங்கன்னா அதுக்குப் பேருதான் பாக்கெட்டிங்காம் (pocketing).

சரி… அப்ப சாஃப்ட் லாஞ்சிங்னா (soft launching)? நமக்கு தெரிஞ்சதெல்லாம் ராக்கெட் லாஞ்சிங் தான். அது என்ன சாஃப்ட் லாஞ்சிங்னு கேட்குறீங்களா…?

ஒரு வழியா நீங்களும் ஒரு பொண்ணு கூட அல்லது பையன் கூட கமிட் ஆகிட்டீங்கன்னா, டைரக்டா சோசியல் மீடியால எல்லாருக்கும் ரிவீல் பண்ணாம, அவங்களோட கைகோர்த்து ஒரு ஃபோட்டோ, அவங்களும் நீங்களும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணிட்டு ட்வின்னிங்ல (twinning) ஒரு ஃபோட்டோ, அதுக்கப்புறம் அவங்களுடைய ஃபேஸ் ரிவீல் பண்றதுன்னு….

soft launching
soft launching

கொஞ்சம் கொஞ்சமா உங்களுடைய கேர்ள் ப்ரண்டையோ பாய் ப்ரண்டையோ மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்துனீங்கனா அதுதான் சாஃப்ட் லாஞ்சிங்காம்..

இந்த மாதிரி சாஃப்ட் லாஞ்சிங் பண்ணனும்னு உங்களுக்கும் ஆசையா இருக்கலாம்.. ஆனா அதுக்கு முதல்ல கமிட் ஆகணும் பிரண்ட்ஸ்..

அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க…!

ஜென்சியின் காம்ப்ளிமென்ட்ஸ் …

ரொம்ப நாள் கழிச்சு உங்க ஃபிரண்டு உங்களைப் பார்க்கும் போது எப்படி க்லோவப் (glow up) ஆனன்னு கேக்குறாங்கன்னா … ஒன்னும் இல்ல எப்படி இருந்த நீ இப்படி டிரான்ஸ்பார்ம் ஆயிட்டன்னு கேட்கிறதா அர்த்தமாம்.

பதிலுக்கு நீங்களும் இந்த ட்ரெஸ்ல நீ சூப்பரா இருக்க அப்படிங்கிறதை “யூ ஏட் இட் “. (You ate it ) னு சொல்லலாம். அதாவது தூக்கி சாப்பிட்ட போ… பின்னிட்ட போ அப்படிங்கற தான் இப்படிச் சொல்றாங்க…

pookie
pookie

ஹேர் கிளிப்ல இருந்து போடுற செருப்பு வரைக்கும் எல்லாத்துலையும் பிங்க் தான் சூஸ் பண்ணுவேன்னு ரொம்ப கேர்லியா இருந்தாங்கன்னா அவங்கள பிரெப்பி (preppy) ன்னு கூப்பிடலாம்.

இந்த ஃபீல்டுல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்லப்பா… அப்படின்னு யாருக்காவது ஸ்பெஷல் காம்ப்ளிமெண்ட் கொடுக்கணும்னா OGன்னு சொல்லலாம். OG ன்னா ஒரிஜினல் கேங்ஸ்டர்னு (original gangster) பயங்கரமான அர்த்தத்தை வச்சிருக்காங்க ஜென்சி கிட்ஸ்.

இந்த வேர்டு எல்லாருக்குமே தெரிஞ்சி இருக்கலாம். இதுதான் பூக்கி (pookie) அப்படிங்கிற இந்த வார்த்தை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர்ற ஹ ..ஹா..ஹாசினி மாதிரி உங்க லைஃப்ளையும் யாராச்சும் க்யூட்டா பண்றேன் பேருல அட்ராசிட்டிஸ் பண்ணா அவங்கள பூக்கின்னு செல்லமா கூப்பிடலாம். அதேபோல அன்பான நபர்களையோ அல்லது செல்லப் பிராணிகளையோ குறிக்கிற வார்த்தையாவும் இந்தப் பூக்கி (pookie) இருக்கு.

இதுல எந்த ஜென்சி டர்ம்ஸ் கேட்கவே ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் யூனிக்காவும் இருந்ததுன்னு கமென்ட்ல சொல்லுங்க.. 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *