
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளது.
நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய். சூப்பர் ஹீரோப் படமான லோகா மலையாளத்தை தாண்டி நாடு முழுவதும் ஹிட் ஆகியுள்ளது.
சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
“Lokah-வை ஒரு சுயாதீன படமாகத்தான் ஆரம்பித்தோம்” – துல்கர் சல்மான் பேச்சு!
“ஒரு புரொடியூசரா கிளாஸ் டீச்சர் மாதிரி இந்த பசங்களை எடுத்துட்டு வந்திருக்கேன். தமிழ்ல மிகப் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு.
இதை ஒரு சுயாதீன சோதனை படமாகத்தான் நாங்கள் ஆரம்பித்தோம். இவ்வளவு ரீச் ஆகும்னு யாரும் எதிர்பாக்கல. கேரளா ஆடியன்சைதான் மனதில் வைத்திருந்தோம். ஆனால் எல்லோருக்கும் இது கனக்ட் ஆனது பெரிய ஆசீர்வாதம்தான்.
இந்த படக்குழு மிகவும் பாசிடிவ்வாக இருந்தது. அனைத்து துறைகளிலும் எல்லோரும் தங்கள் படம் என்ற உணர்வுடன் பணியாற்றினர். எந்த சண்டை சச்சரவும் இல்லை.
ஒரு தயாரிப்பாளராக எனக்கு கையாள்வது சுலபமாக இருந்தது. இந்த வெற்றி இந்த குழுவுக்கானது. நான் ஒரு அதிர்ஷ்டசாலி தயாரிப்பாளர்!” என்றார்.
பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது டப்பிங் இயக்குநர் பாலா குறித்து பேசிய துல்கர், “பாலா சார் உடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம். அவர் நேரடி தமிழ் படத்தின் ஃப்ளேவரைக் கொண்டுவந்திருவார் என்ற நம்பிக்கை இருக்கு.” என்றார்.

“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது… ஆர்கானிக் வெற்றி”
தொடர்ந்து, “லோகாவில் 5 பாகங்கள் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் இன்னும் அதிகரிக்குமா எனத் தெரியாது. விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படமும் பெரிதாகிக்கொண்டே இருக்கும்.
இதில் வரும் லாபத்துக்கு படக்குழுவினர்தான் சொந்தக்காரர்கள். தொடந்து முதலீடு செய்துகொண்டே இருப்போம். வரப்போகும் பாகங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும், அதனால் அதிக பொறுப்பும் உள்ளது.
நான் எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறேன். இதுபோன்ற அன்பபையும் வரவேற்பையும் பார்த்தது இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது.
டீசர், ட்ரெய்லர் கூட யாருக்கும் புரியவில்லை. முதல் காட்சிக்குப் பிறகுதான் வாய்மொழியாக பரவியது. தமிழ் ஆடியன்ஸ் கூட மலையாளத்தில் படத்தைப் பார்த்து ஆன்லைனில் படம் குறித்து பேசினார். அது எல்லா இடத்திலும் வெற்றிபெற உதவியது.

“கல்யாணி: ரியல் லைஃப் லேடி சூப்பர் ஹீரோ”
நாங்கள் தமிழ், தெலுகு டப்பிங் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் மலையாளத்தில் வெளியாகி ஆர்கானிக்காக வெற்றிபெற்றால் பிற மொழிகளில் வெளியிடலாம் என நினைத்திருந்தோம். அப்படியே நடந்தது.
சந்திரா பாத்திரத்துக்கு கல்யாணி சிறப்பான தேர்வு. அவங்க பர்பாமன்சும் மெனக்கெடலும்… எங்கேயோ போயிட்டாங்க. கதை கேட்ட பிறகு அவங்களே ட்ரெயினிங் ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு ரியல் லைஃப் லேடி சூப்பர் ஹீரோ இவங்க.
நான் நடிக்கும் படங்கள் கமர்சியலா வொர்க் ஆகுமான்னு எனக்குத் தெரியாது. ஒரிஜினாலான கதையா என்றுதான் பார்ப்பேன்.

எனக்கு புராஜெக்ட்ஸ் பிடிக்காது. இவங்களை கொண்டுவந்த வொர்க் ஆகும்னு பிளான் பண்ணி பண்றது. எனக்கு கதைகள் பிடிக்கும், வாசிக்க பிடிக்கும். ஒரு கதையை நல்ல நடிகர்கள், மியூசிக் வச்சு கமர்சியல் ஆக்க பிடிக்கும்.” என்றார்.
மம்முட்டியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பிய்போது, “அவர் நல்லா இருக்கார், படத்தைப் பற்றி பேசலாம்” எனக் கூறி கடந்தார் துல்கர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR