
போடி: செங்கோட்டையன் கருத்து சரிதான். பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்ந்தால்தான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வஉசியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு போடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு போடி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.