• September 5, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி பணியாளர்கள் ஒரு வேனில் வருவார்கள்… அந்த வேனை பார்த்தவுடன் தெரு நாய்கள் அலறி அடித்து ஓடி தப்பித்து விடும். ஆனால் அவைகளை துரத்தி பிடித்து வேனில் ஏற்றிக்கொண்டு  செல்வதை நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன்.

                     ஆனால் சமீப ஆண்டுகளாக அப்படி நடைபெறுவதில்லை.  காரணம் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒரு சிலர் அப்படி செய்வதை விரும்புவதில்லை.  பிறகு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள். இருந்தாலும் நாய்களின் பெருக்கம் குறைந்தபாடில்லை.

                     நாய்கள் நன்றியுள்ளது தான்… தோழமை கொண்டவை தான். மறுக்க இயலாது. நாங்கள் திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தில் வீடு கட்டி போன புதிதில் என் மகள் நாய் வளர்க்க ஆசைப்பட்டு ஒரு நாயை வளர்த்தோம்.  பின்பு அது காணாமல் போய் விட்டது. எங்கள் வீட்டிற்கு ஏதாவது ஒரு நாய் வந்து விடும். என் மனைவி  அதற்கு சோறு போடுவார்கள். அதனால் அந்த இடத்திலேயே அடைக்கலமாகி விடும்.

  ஒரு தடவை இரண்டு நாய்கள் வீட்டிற்கு வந்து அடைக்கலமாகி விட்டன. நாங்கள் தனியாக இருந்த தால்… அந்த நாய்கள் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. ஆனால்  எங்கள் வீட்டிற்கு அருகில்  காலியான வீட்டு மனைகள் உள்ளதால்…அங்கு ஆடு மேய்த்து கொண்டு வருபவர்களையும்…ஆடுகளையும் இந்த இரண்டு நாய்கள் துரத்தி கடித்து விடும். இதனை ஒரு புகாராக எங்களிடம் சிலர் சொல்வார்கள்.

                     ஒரு கட்டத்தில்..அந்த இரண்டு நாய்களும் காணாமல்  போய் விட்டது. விசாரித்ததில்  …ஆடு ..மாடு மேய்ப்பவர்களுக்கு இந்த நாய்கள் இடையூறாக இருப்பதால் விஷம் வைத்து விட்டார்கள் என்று கேள்விப்பட்டோம். அதிலிருந்து நாங்கள் நாய்கள் வளர்ப்பதில்லை.

                        ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில்… நாய் நல விரும்பிகள் மற்றும்  தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பவர்கள் நடத்திய விவா த த்தில்… தெரு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று  வாதிட்டதில் ஒரு நியாயம் இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர்… இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி துன்புறுத்தி நாய்களால் இன்னல்.. என்று பாதிக்கப்பட்டோர் கோரிக்கை நியாயமானது. ஆனால்..

                     நாய் நல விரும்பிகள் என  சொல்லப்பட்டோர் அனைவரும்… நடுத்தர மக்கள் அல்ல அவர்கள் கார்களில் செல்பவர்கள். அவர்களுக்கு இந்த நாய் தொல்லைகள் ஏதுமில்லை. தெரு நாய்கள் ஒருபோதும் கார்களைத் துரத்துவதில்லை.

                     “குழந்தைகளை விட நாய்கள் மீது அன்பு செலுத்துவதாக காட்டிக் கொள்வது மனிதாபின தன்மையை மக்கள் இழந்து இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது.

                     நாட்டில்  நாய் நல விரும்பிகளுக்கு இருக்கும் உரிமை மற்றவர்களுக்கும் இருக்கிறது என்பதை  புரிந்து கொள்ளாத அவர்கள் படித்ததுதான் என்ன? என்பது புரியவில்லை.

                     ”பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம்… ஆனால் ஆபத்து என்றால் எதிர்ப்பது தான் நன்மை!

-கே. அசோகன் சென்னை                  

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *