
பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்றது. இந்நிலையில், தர்பங்கா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசியதைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் பிஹாரில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.