• September 5, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: பழனி​சாமி​யின் தலைமை வேண்​டாம் என செங்​கோட்​டையன் அறிவிக்க வேண்​டும் என்று அதி​முக ஒருங்​கிணைப்​புக் குழு நிர்​வாகி புகழேந்தி கூறி​னார். திருப்​பூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஒரு காலத்​தில் செங்​கோட்​டையன் பின்​னால் பழனி​சாமி நடந்​து​ கூட வரமாட்​டார். ஓடித்​தான் வரு​வார். தற்​போது, தமிழகமே செங்​கோட்​டையன் ஏதோ செய்​யப்​போகிறார் என்று எதிர்​பார்த்து உள்​ளது. எனவே, தயவுசெய்து அவர் விளை​யாடக் கூடாது.

அனை​வரும் இணைந்து செயல்பட வேண்​டும் என்று பூசி மெழுகக் கூடாது. பழனி​சாமி​யின் தலை​மை​யில் பயணம் செய்​தால், செங்​கோட்​டையன் 7 முறை வெற்றி பெற்ற கோபிசெட்​டி​பாளை​யத்​தில் மீண்​டும் வெற்றி பெற​மாட்​டார். டெபாசிட் கூட கிடைக்​காது. சர்​வா​தி​கார​மாக செயல்​பட்டு வரும் பழனி​சாமி​யின் தலைமை வேண்​டாம் என்று அனை​வரும் எதிர்​பார்த்​துள்​ளனர். எனவே, பழனி​சாமி​யின் தலைமை வேண்​டாம் என்று செங்​கோட்​டையன் அறிவிக்க வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *