
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் பதன் மஜ்ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன்பேரில் பாட்டியாலா சிவில் லைன்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 2-ம் தேதி கர்னால் பகுதியில் எம்எல்ஏ ஹர்மீத்தை கைது செய்தனர்.
கர்னால் போலீஸ் நிலையத்துக்கு எம்எல்ஏவை அழைத்து சென்றனர். அப்போது அவரும் அவரது கூட்டாளிகளும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.