• September 5, 2025
  • NewsEditor
  • 0

காலநிலை மாற்றம் என்பது இனிவரும் காலங்களில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது. பருவநிலை மாற்றம் என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருவது, ஒவ்வொரு கோடைகாலத்திலும் சுடமடிக்கும் வெயில் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு வருடமும் நீலகிரியின் மேகக்காடுகள் மெல்ல மெல்ல மறைந்து வருவதைப் பற்றி இயற்கை விஞ்ஞானிகள் கூறி வருவது நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், நம் கண்முன்னே கடலோர மாவட்டங்களின் கிராமங்களை கடல் அரித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

இந்தக் காலநிலை மாற்றம் தமிழ்நாட்டின் பல்லுயிர் வாழ்வியலுக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆமைகள்

வெப்பநிலை மாற்றத்தையடுத்து, நீலகிரியின் உயரமான மலைக்காடுகளின் புல்வெளிகள் குறையத் தொடங்கியதன் விளைவாக அங்கு வாழ்ந்து வரும் காட்டு வெள்ளாடுகளின் உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அழிந்து வரும் பல்லுயிர் சங்கிலி

கடல் மட்டம் உயர்வதும், கடற்கரை அரிப்பும் காரணமாக ‘ஆலிவ் ரிட்லி’ எனப்படும் கடலாடி ஆமைகள் முட்டை இடும் பகுதிகள் அழிந்து வருகின்றன. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் மலைக்காடுகளில் வாழும் இந்த அரிய இனம், வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால், அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளன.

இது போல இன்னும் எத்தனையோ உயிரினங்கள் ஆபத்தின் விளிம்பில் உள்ளன. அது, அவற்றின் வாழ்விற்கே அல்லாமல், பல்லுயிர்ச் சங்கிலியில் அவற்றை வைத்து மிகுந்த பயன்பெறும் நமக்கே மிகப்பெரிய இழப்பாகும். மேலும், வரும் தலைமுறையினர் இந்த உயிர்ச்சங்கிலிக்குள் வராமலேயே போய்விடுவதற்கான வாய்ப்புகள் ஏராளம்.

காலநிலை மாற்றத்தால் அழிந்து வரும் உயிரினங்கள்

காலநிலை மாற்றத்திற்கெதிரான மிகப்பெரிய உறுதிமொழி

இப்படியான அச்சுறுத்தலுக்கு எதிராகவும், பல்லுயிர் சங்கிலியை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் இயற்கைக்கு ஆதரவான குரல்களை ஒன்றிணைத்து “காலநிலை மாற்றத்திற்கெதிரான மிகப்பெரிய உறுதிமொழி” ஏற்பு இயக்கத்தை வாய்ஸ் ஆஃப் தி வைல்ட் என்னும் இளம் தன்னார்வலர் குழு தொடங்கியுள்ளது.

“ஒரே குரல், ஒரே கணம், ஒரே உறுதிமொழி” என்ற இந்த உறுதிமொழி ஏற்பு இயக்கம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.

இதுகுறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிரண்குமார்,
“காலநிலை மாற்றம் ஒரு அரசியல் பிரச்னை அல்ல; அது மனிதகுலத்தின் பிரச்னை. அதை அடுத்த தலைமுறையினரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *