• September 5, 2025
  • NewsEditor
  • 0

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பாதான் 2020ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் குறித்து தற்போது விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எம். எஸ். தோனி குறித்து பேசிய அவரது வீடியோ தற்போது ‘ரசிகர் சண்டையிலும்’ PR லாபியிலும் தவறான கருத்துடன் பரப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இர்ஃபான் பதான்

ஸ்போர்ட்ஸ் டாக் தளத்துக்கு அவர் அளித்த நேர்காணலில், அப்போது கேப்டனாக இருந்த எம். எஸ். தோனி செய்த மாற்றங்களால் தான் தனது சர்வதேச கரியர் முடிவுக்கு வந்தது குறித்து பேசியிருந்தார்.

அதில் தான், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்காக வீரர்களைக் காக்காப்பிடிப்பது கிடையாது எனக் கூறியிருந்தார். ஆனால் தோனியின் பெயரை குறிப்பிடவில்லை.

தற்போது, இர்ஃபான் தோனியைக் குறிப்பிட்டே அப்படிப் பேசியதாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோ பரவி வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்ததை வெளிப்படுத்தும் வகையில், “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” எனப் பதிவிட்டுள்ளார்.

இர்ஃபான் பாதான்

தோனி கேப்டனாக அறிமுகமான காலத்தில் முன்னணி பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார் இர்ஃபான் பாதான். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியிலும் இவரது பங்களிப்பு உண்டு.

ஆனால், காயங்கள் காரணமாக இவரது கரியரின் இரண்டாம் பாதி பிரகாசிக்கவில்லை. 2012ஆம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதிலும், இர்ஃபான் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *