• September 5, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: தனது குடும்​பத்​தினரைப் பற்றி மட்​டுமே யோசிக்​கும் முதல்​வருக்கு, ஏழை மக்​கள் துயரைப் போக்​கும் சிந்​தனையே இல்லை என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். மதுரை மாவட்​டத்​தில் கடந்த 3 நாட்​களாக ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்ட பழனி​சாமி, 4-வது நாளான நேற்று சோழ​வந்​தான் சட்​டப்​பேர​வைத் தொகு​திக்கு உட்​பட்ட வாடிப்​பட்​டி​யில் பொது​மக்​களிடையே பேசிய​தாவது: தமிழகத்​தில் குடும்ப ஆட்சி நடை​பெறுகிறது. ஒரு குடும்​பம் மட்​டும்​தான் பயனடைகிறது.

திமுக ஆட்​சி​யால் மக்​களுக்கு எந்​தப் பயனும் இல்​லை. முதல்​வர் ஸ்டா​லினுக்கு மக்​களைப் பற்றி கவலை​யில்​லை. அவரது வீட்​டில் இருப்​பவர்​களுக்கு என்ன பதவி கொடுக்​கலாம், என்ன அதி​காரம் கொடுக்​கலாம் என்​ப​தில்​தான் கவனம் செலுத்​துகிறார். ஏழை மக்​களின் கஷ்டங்​களைப் போக்​கு​வது குறித்து அவர் சிந்​திப்​ப​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *