
மேட்டூர் / தருமபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணை நடப்பாண்டில் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 2-ம் தேதி 6-வது முறையாக எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வந்தது.
அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 29,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 23,300 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு பிறகு 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டது.