• September 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எந்த நாட்​டில் இருந்​தா​லும் என் மனம் தமிழகத்தை சுற்​றித்​தான் இருக்​கும் என்று திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க. ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். ஜெர்​மனி, இங்​கிலாந்து நாடு​களுக்​குச் சென்​றுள்ள முதல்​வர் ஸ்டா​லின், தொண்​டர்​களுக்கு எழுதி​யுள்ள கடிதம்: ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்​குடன் திமுக அரசு தொடர்ந்து முன்​னேறி வரு​கிறது. அதை மேலும் விரைவுபடுத்த முதலீடு​களை ஈர்ப்​ப​தற்​காக​ ஆக. 30-ல் ஐரோப்​பிய சுற்​றுப்​பயணத்​தைத் தொடங்​கினேன்.

அன்று இரவு ஜெர்​மனி​யில் தூதரக அதி​காரி​கள் வரவேற்​றனர். மேலும், அப்​பகு​தி​யில் வசிக்​கும் தமிழர்​கள் குடும்​பம், குடும்​ப​மாக வந்து வரவேற்பு அளித்​தனர். மறு​நாள் நடைப​யிற்​சி​யின் போது சென்​னை​யில் பெய்த மழை குறித்த தகவலைக் கேட்​டறிந்​தேன். சென்​னை​யில் எங்​கும் மழை நீர் தேங்​க​வில்லை என்​பதை துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​தார். எந்த நாட்​டில், எந்த நகரில் இருந்​தா​லும் என் மனம் தமிழகத்தை சுற்​றித்​தான் இருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *