
சென்னை: சென்னையில் இன்று நடைபெறவுள்ள உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த விவரத்தை, மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருவொற்றியூர் மண்டலம் வார்டு 1-ல் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கத்திவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம், வார்டு 24-ல் புனித அந்தோணி நகர் ஜிஎன்டி சாலையில் உள்ள தியா கல்யாண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 38-ல் தண்டையார்பேட்டை, படேல் நகர் சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம், வார்டு 62-ல் சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலையில் உள்ள மே தின விளையாட்டு மைதானம், திருவிக நகர் மண்டலம், வார்டு 64-ல் ஸ்ரீநிவாசன் நகரில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடம்.