
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ( செப்டம்பர் 17) முன்னிட்டு ஒடிசாவை சேர்ந்த மாணவர்கள் அவரது உருவத்தை சாக்லேட்டில் வடிவமைத்து அசத்தியுள்ளனர். இதற்காக இவர்கள் 55 கிலோ டார்க் சாக்லேட் மற்றும் 15 கிலோ ஒயிட் சாக்லேட் பயன்படுத்தியுள்ளனர்.
புவனேஸ்வரில் உள்ள கிளப் சாக்லேட் என்ற தொழில் முறை பேக்கிங் மற்றும் பேஸ்ட்ரி பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர்கள் இந்த சாக்லேட் சிற்பத்தை உருவாக்கியுள்ளனர்.
முழுக்க முழுக்க இது சாக்லேட்டால் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராகேஷ் குமார் சாகு மற்றும் ரஞ்சன் பரிடா ஆகியோர் தலைமையிலான 15 மாணவர்கள் குழு 7 நாள்கள் உழைத்து இந்த தனித்துவமான படைப்பை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தின் கூற்றுப்படி பிரதமர் மோடியின் இத்தகைய சாக்லேட் சிற்பம் இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சிற்பம், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் போன்ற முக்கிய அரசு திட்டங்களின் சின்னங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த சிற்பம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) சாதனைகளையும் எடுத்துக்காட்டுகிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!