• September 4, 2025
  • NewsEditor
  • 0

“தி.மு.க ஆட்சியில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறதே!”

“அரசியலமைப்பின் வழிநின்று ஆட்சி நடத்த வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தருவதில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். நிதி நெருக்கடியால், ஆள் பற்றாக்குறையும் மாநில அரசில் நிலவுகிறது.

இப்படியான நிர்வாகச் சிக்கல்களும், நிதி நெருக்கடியும் இருப்பதால்தான் ஆங்காங்கே தனியாரிடம் வழங்க வேண்டியிருக்கிறது. அரசு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் கோரிக்கைகளையும் அரசு பரிசீலித்துவருகிறோம்”

உதயநிதி – இன்பநிதி

“சரி, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம், பன்னாட்டு அரங்கம் இதெல்லாம் அமைக்க நிதி இருக்கும்போது, தூய்மைப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய நிதி இல்லையா?”

“இந்த ஒப்பீடே தவறானது. நினைவிடம் உள்ளிட்டவை அமைப்பதெல்லாம் ஒரு முறை செலவு. ஆனால், மற்றவை அப்படியல்ல. அரசுத் திட்டங்களைத் தொடர்வதற்காகச் செலவிடும் நிதிக்கும், சிலை அமைக்கும் நிதிக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு”

““தி.மு.க-மீதான விஜய்யின் காட்டமான விமர்சனம் பெருங்கூட்டத்தைச் சென்றடைகிறது. ஆனால், முதல்வரோ, ‘இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்கிறாரே?”

“தி.மு.க ஆட்சியில் இருக்கும் கட்சி, எங்களுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன. ஆகையால், போர் நடக்கும்போது இடையில் ஓடுபவர்கள் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை.”

இன்பநிதி, உதயநிதி, ஸ்டாலின்

“உங்கள் கூட்டணிக் கட்சிகளே அரசை தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறார்களே!”

““கூட்டணிக் கட்சிகளுக்குச் சில விமர்சனங்களும் கோரிக்கைகளும் இருப்பது வழக்கம்தான். அவர்களைச் சமாதானப்படுத்திவிடுவோம். அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு, அதற்குண்டான பரிகாரங்களைச் செய்துவிடுவோம். ஆகையால், தி.மு.க கூட்டணியில் எந்தச் சலசலப்பும் இல்லை.”

ஆர்.எஸ்.பாரதி

“கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கையான, ‘ஆணவப் படுகொலை தனிச்சட்டம் எப்போதும் நிறைவேறும்'”

“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம், அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு என தி.மு.க கொண்டுவந்த திட்டங்களை இன்றைக்கு நீதிமன்றங்களும் அங்கீகரித்துவருகின்றன. அதன்படி இந்த விவகாரத்தையும் நிதானத்துடன் அணுகி, தீர்வு காண்பார் முதல்வர்.”

‘உதயநிதியைத் தாண்டி இன்பநிதியும் தி.மு.க-வுக்குள் ஆதிக்கம் செலுத்தப்போகிறார்’ எனப் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி?”

“இன்பநிதி கட்சிக்குள் வருவது தி.மு.க-வின் உள்விவகாரம். அதுபற்றியெல்லாம் எடப்பாடி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை!”

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *