• September 4, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32), துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக‌ கடந்த மார்ச்​சில் பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ. 2.8 கோடி மதிப்​பிலான தங்​க​மும், ரூ.2.4 கோடி ரொக்​க​மும் சிக்​கியது. இவ்​வழக்​கில் ரன்யா ராவுக்கு பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் கடந்த ஜூலை​யில் ஓராண்டு சிறை தண்​டனை விதித்து உத்​தர​விட்​டது.

இதனிடையே ரன்யா ராவிடம் டிஆர்ஐ அதி​காரி​கள் நடத்​திய விசா​ரணை​யில் அவர் 46 முறை துபாய், ஆப்​பிரிக்கா போன்ற வெளி​நாடு​களுக்கு சென்​றது தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *