
விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழ வைத்த சம்பவத்தில் நகராட்சி தலைவரின் கணவர் உட்பட 5 பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. திண்டிவனம் நத்தைமேடு பகுதி விஎம்எஸ் நகரைச் சேர்ந்தவர் மரூர் ராஜா, குண்டர் சட்டத்தில் கைதான சாராய வியாபாரி. முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர்.
இவரது மனைவி ரம்யா, திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு, தெருவிளக்கு தொடர்பான கோப்புகளைத் தேடிக் கொண்டிருந்த இளநிலை உதவியாளர் முனியப்பனிடம், தனக்கு தேவையானபதிவேட்டை ரம்யா கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது கவுன்சிலர் ரம்யாவை முனியப்பன் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.