
ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தனது மகளும் தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவை நேற்று முன்தினம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் கவிதா நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நான் பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.