
திருப்பூர்: அதிமுக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து 5-ம் தேதி (நாளை) மனம் திறந்து செய்தியாளர்களிடம் பேச உள்ளதாகக் கூறி கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்க நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “நான் சசிகலாவை சந்திக்கவில்லை,” என்றார். “வேறு கட்சியில் இணைகிறீர்களா?” என கேள்விக்கு, நாளை அனைத்துக்கும் பதில் அளிப்பதாகத் தெரிவித்தார்.