
புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதையடுத்து, வரி குறைப்பு நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் வரி மறுசீரமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆளும் 8 மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.