
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியாது.
விலையுயர்ந்த கார்களை வாங்கி அழகுபார்ப்பதில் அவருக்கு அலாதி பிரியம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவரிடம் லம்போர்கினி, போர்ஷே, மெர்சிடிஸ்-பென்ஸ் G63 AMG, ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி, எல்டபிள்யூபி, உருஸ், லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90 V8, போர்ஷே 911 கரேரா எஸ் உள்ளிட்டப் பல கார்களை வைத்திருக்கிறார்.
அவரிடம் இல்லாத பிராண்ட் கார்களில் மிக முக்கியமானது ஃபெராரி. தற்போது அந்த பிராண்ட் காரையும் வாங்கிவிட்டார். ஃபெராரி புரோசங்க்கு (Ferrari Purosangue) எஸ்யூவி இத்தாலிய சூப்பர்கார் தயாரிப்பாளரின் முதல் எஸ்யூவி இதுதான்.
இது கேரள மாநிலத்திலேயே முதல் ஃபெராரி புரோசங்க்கு இந்த கார் மட்டுமே. வெள்ளை முத்து நிறமான Bianco Cervino என்ற கிளாசிக் ஷேடை தேர்வு செய்திருக்கும் பஹத் பாசில், தன் ரசனைக்கு ஏற்றவாரு பல அலங்கார மாறுதல்களையும் செய்திருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவிலேயே உள்ள ஃபெராரி புரோசங்கு கார்களில் மிகவும் தனித்துவமான வடிவமைப்புகளில் ஒன்றாகவே பஹத் பாசிலின் கார் இருக்கிறது.
ஃபெராரி புரோசங்கு, வரிசையில் உள்ள முதல் மற்றும் ஒரே எஸ்யூவி ஆகும். இதனை சிறப்பானதாக மாற்ற, ஃபெராரி இந்த எஸ்யூவியில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைப் பொருத்தியுள்ளது. இந்த இன்ஜின் 725 PS சக்தியையும், 716 Nm உச்ச திறனையும் உருவாக்கக்கூடியது.
ஃபெராரி புரோசங்கு, லம்போர்கினி உருஸ் மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் DBX போன்ற கார்களுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே அதன் ஷோரூம் விலை சுமார் ரூ.10 கோடி. ஃபஹத் ஃபாசில் பல மாறுதல்களைச் செய்திருப்பதால், அவர் இதைவிட அதிகமாகப் பணம் செலுத்தியிருக்கலாம்.
ஃபெராரி புரோசங்கு கார் பெங்களூருவைச் சேர்ந்த கார் சேகரிப்பாளர் பூபேஷ் ரெட்டி, தமிழ் நடிகர் விக்ரம், ஆகாஷ் அம்பானி போன்றவர்கள் வைத்திருக்கின்றனர். அம்பானி குடும்பம், ஒன்றுக்கு பதிலாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு ஃபெராரி புரோசங்கு கார்களைக் கொண்டுள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…