• September 3, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை எட்டமுடியும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆயுத மோதல் ரஷ்யா-உக்ரைன் போர். இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் அலாஸ்காவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Ukraine President Zelensky

இந்த சந்திப்புக்குப் பிறகு, புதின் நீண்ட நாட்கள் நடந்துவரும் போரால் சோர்வுற்றிருப்பதாகவும் விரைவில் தீர்வை எட்டமுடியும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

ஆனால் உக்ரைன், பிரான்ஸ் உட்பட பிற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா அமைதி உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளும் என்பதை நம்பவில்லை. ஒருவேளை ரஷ்யா உக்ரைன் போரை வென்றால், தொடர்ந்து நேட்டோ உறுப்பினர்களாக இருக்கக் கூடுய ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

அலாஸ்காவில் ட்ரம்ப்புடனான சந்திப்புக்குப் பிறகு நீண்டநாட்கள் அமைதிகாத்த புதின் சீனா சுற்றுப்பயணத்தின்போது ஐரோப்பிய நாடுகளின் கருத்தை எதிர்த்துள்ளார்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் – புதின் அலாஸ்கா சந்திப்பு

ரஷ்யாவை எதிரியாக சித்திரிக்க முயலும் திறமையற்றவர்களால் தூண்டப்பட்ட “திகில் கதைகள்” என அவற்றை மறுத்துள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகள் நேட்டோவின் உதவியுடன் சோவியத்துக்குப் பிறகு அதன் நிலப்பரப்புகளை உள்வாங்க எண்ணியதனால் உக்ரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய தகுதியிருக்கிறது. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் நேட்டோ என்பது வேறுவிஷயம்…” என ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோவிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

மேலும் உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரை முடிவுக்குக் கொண்டடுவர சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

இந்த விஷயத்தின் உக்ரைன் யாருடன் இணைய முடியும், யாருடன் இணைய முடியாது என்பதை ரஷ்யா கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது உக்ரைன். மேலும், தங்கள் நிலப்பரப்புகளை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *