
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் உருவான ‘என்ன சுகம்’, ‘எஞ்சாமி தந்தானே’ என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளிவந்திருந்தன.
அந்த இரண்டு பாடல்களையும் தனுஷே எழுதிப் பாடியிருக்கிறார். படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வர, படக்குழுவும் அடுத்தடுத்து ப்ரோமோஷன் பணிகளுக்கான திட்டங்களை கையில் வைத்திருக்கிறது.
‘இட்லி கடை’ திரைப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனமும், தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் தயாரித்திருக்கின்றன.
படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டி.வி. பெற்றிருக்கிறது. தற்போது படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.
‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் பேரனும், தமிழக துணை முதல்வர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி படத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

உதயநிதி சினிமாவிலிருந்து விலகியப் பிறகு, அவருடைய மகன் இன்பநிதி இப்போது ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனத்தின் பொறுப்பிற்கு வந்திருக்கிறார்.
சமீபத்தில்கூட இன்பநிதிக்கு கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகத்திலும் பொறுப்புக் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வந்திருந்தது. இப்போது ‘இட்லி கடை’ படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்திருக்கிறார் இன்பநிதி உதயநிதி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…