
ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பிஆர்எஸ்) கட்சியில் இருந்து கவிதா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர், ராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அரசியல் எதிர்காலம் குறித்த முடிவை வரும் நாட்களில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர ராவ், தனது மகளும் நிஜாமாபாத் மேலவை உறுப்பினருமான கவிதாவை, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக நேற்று அறிவித்தார்.