• September 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: என் தாய் பற்றி அவதூறாக பேசி​யது எனக்கு மட்​டுமல்ல, நாட்​டில் உள்ள அனைத்து தாய்​மாருக்​கும் அவமானம் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிஹார் மாநிலத்​தில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்று வரு​கிறது. இதில், ராஷ்ட்​ரிய ஜனதா தளம், சமாஜ்​வாதி உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகளின் தலை​வர்​களும் பங்​கேற்று வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தர்​பங்கா நகரில் சமீபத்​தில் நடை​பெற்ற பேரணி​யின்​போது, அடை​யாளம் தெரி​யாத நபர் ஒரு​வர் பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறான கருத்து தெரி​வித்​துள்​ளார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவியது. இதற்கு பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் மற்​றும் பாஜக​வினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *