
பல படங்களில் பெண்களை பாலியல் பொருளாக தான் காண்பிக்கிறார்கள் என்று ‘பேட் கேர்ள்’ இயக்குநர் வர்ஷா தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை வர்ஷா இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸருக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்பு உருவானது. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து, தற்போது வெளியாகவுள்ளது.