
சென்னை: மின்வாரிய ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட ஏதுவாக பண்டிகை கால முன்பணம் வழங்கப்படுகிறது. கடந்த, 2019 ஆண்டுக்கு முன் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது,அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்தது.