
சென்னை: ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், பணிகளை திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2023-ல் ‘மிக்சாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து, அதிக மழைப்பொழிவைத் தாங்கும் திறன் இல்லாத நிலையில் ஒக்கியம் மடுவு பாலம் இருந்தது தெரிந்தது. அதாவது இந்த நீர்வழிப்பாதை 90 மீட்டர் அளவிலும், குறைந்த உயரம் கொண்டதாகவும் இருந்தது.