
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் நியூநேட்டல் இன்டென்சிவ் கேர் யூனிட்டில்(பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு) பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்தப் பிரிவில் இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை, எலிகள் கடித்துக் குதறியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மருத்துவமனைதான் மத்திய பிரதேச மாநிலத்திலேயே மிகப்பெரிய மருத்துவமனை என்று பெயர் பெற்றதாகும்.