
அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பள்ளி வகுப்பறையில் தலைமை ஆசிரியரின் கை, கால்களை மாணவர்கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார்.
அரூர் அருகேயுள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.