
புதுடெல்லி: ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை செயலற்றதாக்கும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளது என்றும் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.