
சென்னை: தமிழகத்தில் செப்.6-ம் தேதி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது மேலும் வலுவடைந்து, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா பகுதிகளை நாளை கடந்து செல்லக்கூடும்.