• September 2, 2025
  • NewsEditor
  • 0

காதலில் நாடகத்தன்மையான விஷயங்கள் நடப்பது சாதாரணமானதுதான். ஆனால் பீகாரில் காதலி தன்னிடம் பேசாததால் ஆத்திரமடைந்த இளைஞரின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

viral video

மின்சார கம்பத்தின் மேலேறிய இளைஞர் ஒருவர் பெரிய அளவிலன இடுக்கி போன்ற ஒரு கருவியை வைத்து மின் இணைப்புகளைத் துண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த இளைஞரின் காதலியின் தொலைபேசி எப்போதுமே பிஸியாக இருந்ததால் கடுப்பாகி, இப்படிச் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் அந்த தகவல் உண்மையா என உறுதிபடுத்தப்படவில்லை.

போலி செய்தியா?

இணையவாசிகள் பலரும் இந்த வீடியோ ஒரு லைன்மேன் வேலை செய்யும் வீடியோவாக இருக்கலாம் எனக் கூறி வருகின்றனர். எனினும் ஜீ நியூஸ், மிண்ட் லைவ் உள்ளிட்ட பல செய்தி சேனல்கள் அடையாளங்களைத் தெரிவுபடுத்தாமல் இதே செய்தியைப் பகிர்ந்திருக்கின்றன.

இந்த செய்திகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு மின்சார வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றுவதை சுட்டிக்காட்டும் வகையில் electri.cian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது.

எனினும் இது உண்மையல்ல என முழுவதுமாக புறக்கணித்துவிட முடியாது. ஏனென்றால் பீகாரில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் அப்படி.

காதலனை சந்திக்க கிராமத்தையே இருளில் மூழ்கடித்த காதலி

2023ம் ஆண்டு பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் ப்ரீத்தி குமாரி என்ற பெண், தனது காதலனை ரகசியமாக சந்திப்பதற்காக மொத்த கிராமமும் இருளில் மூழ்கும் வண்ணம் மின்சாரத்தைத் துண்டித்து வந்துள்ளார்.

இதனால் அவதியுற்ற கிராமமக்கள் ஒருநாள் பிரீத்தியையும் அவரது காதலர் ராஜ்குமார் என்பவரையும் பிடித்துள்ளனர். அன்று ராஜ்குமாரை சில கிராமவாசிகள் தாக்கியிருக்கின்றனர். சில நாட்களில் இருவருக்கும் உள்ளூர் கோவிலில் திருமணம் நடந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *