
தெருநாள் பிரச்சினை தொடர்பான நிகழ்ச்சிக்கு குவிந்த கிண்டல்களால் படவா கோபி மற்றும் அம்மு ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தெருநாய் ஆதரவு, எதிர்ப்பை முன்வைத்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஆகஸ்ட் 31-ம் காட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இதில் தெருநாய்க்கு ஆதரவாக பேசிய அம்மு மற்றும் படவா கோபி இருவருடைய கருத்துகள் இணையத்தில் வைரலானது. பலரும் இருவரையும் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் இருவரது பேச்சையும் வைத்து பல்வேறு கேள்விகள், ட்ரோல்கள் என அதிகரித்தன. இந்த விவகாரம் தொடர்பாக படவா கோபி மற்றும் அம்மு இருவருமே விளக்கம் அளித்துள்ளனர்.