
‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதன் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருந்தது. தற்போது இப்படம் டிசம்பரில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.