• September 2, 2025
  • NewsEditor
  • 0

எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசியல் தெரிந்த அமைச்சர்கள் அடுத்த தேர்தலிலும் தாங்கள் ஜெயிப்பதற்கான அடித்தளத்தை அதிகாரத்தில் இருக்கும் போதே போட்டுவைப்பார்கள். ஆனால், விவரமாக அப்படி செயல்படாததால், 2021-ல் அமைச்சராக இருந்தும் தோற்றுப் போனார் கே.சி.வீரமணி. அப்படி அதிகாரத்தைத் தொலைத்தவர், பட்டும் திருந்தாமல் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் திருப்பத்தூர் மாவட்ட அதிமுககாரர்கள்.

அ​தி​முக ஆட்​சி​யில் பசை​யுள்ள பத்​திரப்​ப​திவுத் துறைக்கு அமைச்​ச​ராக இருந்​தவர் கே.சி.வீரமணி. பத்​தாண்டு காலம் அமைச்​ச​ராக இருந்த இவர், வேலூர், திருப்​பத்​தூர், ராணிப்​பேட்டை ஆகிய 3 மாவட்ட அதி​முக-வை தனது பிடிக்​குள் வைத்​திருந்​தவர். ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு, கட்​சிக்​குள் தனது செல்​வாக்கை மேலும் வளர்த்​துக் கொண்ட வீரமணி, தனக்கு போட்​டி​யாக வரு​வார்​கள் என்று கரு​தி​ய​வர்​களை எல்​லாம் ‘கவன​மாக’ பார்த்​துக் கொண்​ட​தாக​வும் தகவல்​கள் உண்​டு. இதனால், முன்​னாள் அமைச்​சர்​களான பாண்​டுரங்​கன், வி.எஸ்​.​விஜய், நிலோபர் கபீல், எம்​.எஸ்​.சந்​திரசேகரன் உள்​ளிட்​ட​வர்​கள் அரசி​யலில் தங்​களுக்​கான இடத்​தைத் தொலைத்​தார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *