
ரவிக்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக சூரி நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
’மாமன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மதிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. இப்படத்தினை முடித்துவிட்டு அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சூரி. அவர் கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக தேதிகள் ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.